TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 16 , 2022 952 days 458 0
  • இந்தியாவும் தென் கொரியாவும் 2030 ஆம் ஆண்டுக்குள் 50 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற ஒரு இருதரப்பு வர்த்தக இலக்கை எட்ட உள்ளன.
    • விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை வழங்குவதன் மூலம் இந்த இலக்கை அடைய இயலும்.
  • இந்திய ரயில்வேயின் மேற்கு ரயில்வே மண்டலத்தின் ரயில்வே பாதுகாப்புப் படை "Mission Amanat" என்ற ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
    • இரயில்வேப் பயணிகள் தங்களது இழந்த உடைமைகளைத் திரும்பப் பெறுவதை எளிதாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவின் தலைவராக ரகுவேந்திர தன்வார் நியமிக்கப் பட்டுள்ளார்.
    • இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவின் முதன்மை நோக்கமானது வரலாற்று ஆராய்ச்சியை ஊக்குவிப்பதும், வழிகாட்டச் செய்வதும், வரலாற்றின் நோக்கம் மற்றும் வரலாற்றின் அறிவியல்சார் எழுதுதலை ஊக்குவிப்பதும் அதனை வளர்க்கச் செய்வதும் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்