TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 25 , 2018 2247 days 754 0
  • நிதி ஆயோக் மற்றும் ஸுரிச்சைச் (சுவிட்சர்லாந்து) சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ABB இந்தியா ஆகியவை நோக்க அறிக்கை ஒன்றில் (Statement of Intent - SoI) கையெழுத்திட்டுள்ளன. ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களின் ஆற்றலைப் பயன்படுத்தி அதிகளவு பலனைப் பெறுவதில் இந்தியாவிற்கு உதவி புரிவதற்காக SoI கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • இந்திய அரசு, நெதர்லாந்து மற்றும் சுவீடன் ஆகியவை HIV/AIDS மீதான முதல் கூட்டிணைவு ஆராய்ச்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
  • மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கழகக் (Defence Acquisition Council - DAC) கூட்டத்தில் பாதுகாப்பு கொள்முதல் செயல்முறைகளை எளிதாக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
    • DAC என்பது இந்திய ஆயுதப்படைகளின் (இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை) மூலதனப் பொருட்களின் கொள்முதல் மீது முடிவெடுக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அங்கமாகும்.
  • உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, காடுகள் அழிப்பு மற்றும் பருவநிலை மாறுபாடு போன்றவற்றால் ஏற்படுகின்ற விலங்குகளின் இயற்கை வாழ்விட இழப்பு போன்ற மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட காரணிகள் கேரளாவில் சமீபத்திய நிபா போன்ற தொற்றுநோய்களின் பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்