TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 25 , 2022 943 days 494 0
  • 9வது தேசிய மகளிர் பனிக் கட்டி மைதான ஹாக்கி சாம்பியன்சிப் போட்டியானது (2022) இமாச்சலப் பிரதேசத்தின் லாஹூல் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள காசா என்னும் இடத்தில் அமைந்த பனிச் சறுக்கு மைதானத்தில் தொடங்கப் பட்டது.
    • இந்த மாநிலத்தில், தேசிய அளவிலான பனிக் கட்டி மைதான ஹாக்கிப் போட்டிகள் மற்றும் மேம்பாட்டு முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • BRICS அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்க வழிகாட்டு குழுவின் சந்திப்பானது, 2022 ஆம் ஆண்டில் இந்தியா 5 நிகழ்ச்சிகளை நடத்தும் என்று முடிவெடுத்துள்ளது.
    • இந்த நிகழ்ச்சியின்போது, இந்தியா தனது தலைமைப் பொறுப்பினை சீனாவிடம் (2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பொறுப்பேற்பு) ஒப்படைத்தது.
  • முழுவதும் ஆப்பிரிக்காவிலேயே உருவாக்கப்பட்ட தனது முதல் செயற்கைக் கோள் தொகுப்பினை தென் ஆப்பிரிக்கா விண்ணில் ஏவியுள்ளது.
    • இதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்று நுண் செயற்கைக் கோள்களானது அமெரிக்காவிலுள்ள கேப் கேனவரல் (Cape Canaveral) எனுமிடத்திலிருந்து விண்ணில் ஏவப் பட்டன.
  • அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனமானது, சமீபத்தில் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்படும் குழந்தைகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டது.
    • பருவ வயதினரை விட இளம்பருவத்தினர் குறைவான இறப்பு வாய்ப்பு மற்றும் குறைவான அறிகுறிகளையே கொண்டுள்ளனர் என இந்த ஆய்வு கூறுகிறது.
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு & காஷ்மீரில், ஜம்மு மாவட்டம் முதல் இடத்தில் உள்ள, மாவட்ட நல்லாட்சிக் குறியீட்டினை அறிமுகம் செய்தார்.
    • இதன் மூலம் இது போன்ற குறியீட்டினைப் பெற்ற முதல் ஒன்றியப் பிரதேசமாக ஜம்மு & காஷ்மீர் மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்