TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 26 , 2018 2378 days 787 0
  • சமீபத்திய ஆய்வின்படி, கடந்த இருபதாண்டுகளில் மோசமடைந்து வரும் காற்றின் தரமானது, இந்தியாவில் அதிகப்படியான சராசரி இறப்பு வயதிற்கு முந்தைய இறப்புகளுக்கு (Premature death) முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இந்த ஆய்வானது, டெல்லியிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், சுற்றுச்சூழலியல் அரசுசாரா நிறுவனமான சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் மேம்பாட்டிற்கான மையத்துடன் (Centre for Environment and Energy Development - CEED)  கூட்டிணைந்து மேற்கொள்ளப்பட்டது.
  • மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமானது, விமானப் பயணிகளின் உரிமைகள் வரையறுக்கப்பட்ட வரைவு பயணிகள் பட்டயத்தை (Draft Passenger Charter) வெளியிட்டுள்ளது. இது விமானப் பயணிகளின் தடையற்ற விமானப் போக்குவரத்து அனுபவத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புகழ்பெற்ற சமூக ஆர்வலரும், கல்வியாளரும், கட்டுரையாளருமான ஃபிரோஷ் பக்த் அஹ்மது, மவுலானா ஆசாத் தேசிய உருதுப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது வேந்தராக 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் ஜாஃபர் சுரேஷ் வாலா என்பவர் வேந்தர் பதவியிலிருந்தார்.
    • ஃபிரோஷ் பக்த், இப்பல்கலைக்கழகம் 1997-ஆம் ஆண்டு தொடங்கப்படுவதற்கு முன்பே இதன் நிறுவனர் குழு உறுப்பினராக இருந்தார்.
  • மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், ஐரோப்பா-இந்தியா இடையேயான கலாச்சார உறவினை பலப்படுத்தியதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தால் கவுரவிக்கப்பட்டார்.
  • திரிபுரா அரசு, பெண்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நிலையிலுள்ள மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராகப் போரிடுவதற்காக, காவல்துறையில் அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு 10% இடஒதுக்கீட்டை அறிமுகம் செய்ய உள்ளது.திரிபுராவில் மாநில காவல்துறையில் பெண்கள் 5% பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளனர். தேசிய அளவில் காவல் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவமானது28% ஆக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்