TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 3 , 2022 934 days 484 0
  • தென் கொரிய நாட்டின் ஒரு மின்னணு உபகரண உற்பத்தி நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், 2021 ஆம் ஆண்டில் வருவாய் அடிப்படையில் சில்லுகள் தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனமான அமெரிக்காவின் இன்டெல் என்ற நிறுவனத்தினை விஞ்சியது.
    • கவுண்டர்பாயிண்ட் தொழில்நுட்பச் சந்தை ஆராய்ச்சி என்ற ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சமீபத்தில் பசுபிக் பெருங்கடலின் பிரெஞ்சு பாளிநேசியாவில் அமைந்துள்ள டஹிடி கடற்கரையில் பவளப்பாறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
    • இந்தப் பவளப் பாறையானது இரண்டு மைல் நீளமாக இருப்பதோடு இது மானுடவியல் நடவடிக்கைகளாலும் காலநிலை மாற்றத்தினாலும் பாதிக்கப் படாமல் உள்ளது.
  • சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்த்த உச்ச நீதிமன்ற தேர்வர்கள் குழு (Collegium) பரிந்துரை செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்