TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 9 , 2022 928 days 509 0
  • சர்வதேச கிரிக்கெட் மன்றமானது, ICCயின் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆண் கிரிக்கெட் வீரருக்கான சர் கேர்ஃபீல்டு சோபெர்ஸ் கோப்பையினைப் பாகிஸ்தானிய வேகப் பந்து வீச்சாளர் சாஹீன் அஃப்ரிதி என்பவருக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
  • வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பினை சாராத ஒரு முக்கிய நட்பு நாடாக கத்தார் நாட்டினை அறிவிக்க அமெரிக்கா முடிவு  செய்துள்ளது.
    • இது அதன் இருதரப்பு உறவுகளின் ஒரு முக்கியத்துவத்தினைப் பிரதிபலிக்கும் முடிவாகும்.
  • ஈஃபில் கோபுரத்தை விட 4 மடங்கு பெரியது என மதிப்பிடப்பட்ட ஒரு மாபெரும் குறுங் கோளானது புவியை நெருங்கி வருவதோடு அது மார்ச் மாதத்தில் புவியின் அருகே கடந்து செல்லும்.
    • 138971 (200 CB21) எனப்படும் இந்தக் குறுங்கோளானது 4.5 மில்லியன் கி.மீ. வரை நெருக்கமாக வரும் என்பதன் காரணமாக நாசா இதனை அபாயம் விளைவிக்கும் ஒரு குறுங்கோள் என வரையறுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்