TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 14 , 2022 923 days 462 0
  • ஆதார் அட்டையை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, ஒரு ‘ஒருங்கிணைந்த எண்ணிம அடையாள கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கை அரசிற்கு மானியம் வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.
    • ராஜபக்சே அரசாங்கம் ஒரு தேசிய அளவிலான திட்டமாக இந்தக் கட்டமைப்பைச் செயல்படுத்துவதற்கு "முன்னுரிமை" அளிக்க உள்ளது.
  • கடலோரக் காவல்படை கடல் ரோந்து வாகனம் திட்டத்தின் கீழ், இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்ட  5வது மற்றும் அதன் தொடர் வரிசையின் கடைசி கப்பலைத் தயாரித்து வழங்கியது.
    • இந்தக் கப்பலுக்கு ஐசிஜிஎஸ் ‘சாக்சம் என்று பெயரிடப்பட்டது.
  • ஆபிரகாம் லிங்கன் தினம் அல்லது லிங்கன் தினம் என்று அழைக்கப்படும் ஆபிரகாம் லிங்கனின் பிறந்தநாள் ஆனது, ஆண்டுதோறும் பிப்ரவரி 12 அன்று கொண்டாடப் படுகிறது.
    • இவர் அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாகப் பணியாற்றியவர் ஆவார்.
  • பார்க்கர் சூரிய ஆய்வுக் கலமானது, வெள்ளிக் கோளின் மேற்பரப்பின் புகைப் படங்களை எடுத்தது.
    • நாசாவின் பார்க்கர் சூரிய ஆய்வுக் கலமானது, விண்வெளியில் இருந்து வெள்ளிக் கோளின் மேற்பரப்பின் தெளிவான புகைப்படங்களை முதல்முறையாக எடுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்