TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 16 , 2022 921 days 459 0
  • இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் 2022-23 ஆம் ஆண்டிற்கான தலைவராக தேபாஷிஸ் மித்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • இந்த நிறுவனத்தின் துணைத் தலைவராக அனிகேத் சுனில் தலாதி என்பவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • ஜெர்மனியின் அதிபர் பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர், அந்நாட்டின் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தினால் ஐந்தாண்டு பதவிக் காலத்திற்கு இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
    • ஸ்டெய்ன்மியருக்கு இதுவே கடைசி பதவிக் காலமாகும்.
  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், 'பஞ்சதந்திரம்' குறித்த முதல் வர்ண நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
    • இது இந்தியப் பத்திரம் மற்றும் நாணய அச்சடிப்புக் கழகத்தின் 17வது நிறுவன தினத்தின் போது வெளியிடப்பட்டது.
  • மைத்ரி முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, இந்திய மாணவர்களுக்காக இரண்டு புதிய உதவித் தொகை மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத் திட்டங்களை ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
    • ஃபுல்பிரைட் மற்றும் ரோட்ஸ் ஆகிய இரண்டு உதவித் தொகைத் திட்டங்களும் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் 45 இந்தியப் பட்டதாரி மற்றும் இளங்கலைப் பட்டதாரி மாணவர்களுக்கு உதவும்.
  • இல்கர் அய்சி என்பவரை ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக டாடா குழுமம் நியமித்துள்ளது.

இவர் துருக்கிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்