குடியரசுத் தலைவர் திரு.இராம்நாத் கோவிந்த கும்மனம் இராஜசேகரன் என்பவரை மிசோரம் மாநிலத்தின் ஆளுநராகவும், பேராசிரியர்.காந்திலால் என்பவரை ஒடிசா மாநிலத்தின் ஆளுநராகவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 153ன் கீழ் நியமித்துள்ளார்.
கும்மனம் இராஜசேகருக்கு முன்னர் மிசோரம் மாநிலத்தின் ஆளுநராக லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) நிர்பய் ஷர்மா இருந்தார்.
பீகார் மாநிலத்தின் ஆளுநரான சத்யபால் மாலிக் அவர்களுக்கு ஒடிசா மாநில ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டிருந்தது. தற்போது ஒடிசா மாநிலத்திற்கு பேராசிரியர் காந்திலால் முழுநேர ஆளுநராக செயல்படுவார்.
மத்திய உள்துறை அமைச்சகம், பெண்கள் பாதுகாப்பு மீதான அக்கறைகள் அதிகரித்து வருவதற்கு மத்தியில், பெண்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை விரிவாக குறிப்பிட்டுக் காட்டும் நோக்கில் பெண்கள் பாதுகாப்புப் பிரிவை உருவாக்கியுள்ளது. இந்தப் பிரிவானது, பெண்கள் தொடர்புடைய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மாநில அரசுகளுடன் கூட்டிணைந்து பெண்கள் பாதுகாப்பின் அனைத்து அம்சங்களையும் கையாளும்.
நாட்டின் மிகவும் மதிப்பு வாய்ந்த மற்றும் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப அவுட்சோர்ஸிங் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான சந்தை மூலதன (Market Capitalisation-Cap) மைல்கல்லை அடைந்து, இந்நிலையை அடைந்த முதல் இந்திய நிறுவனமாக உருவெடுத்து வரலாறு படைத்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 24 வயதாகும் அர்ஜீன் வாஜ்பாய் உலகின் மூன்றாவது மிக உயர்ந்த மலைப் பகுதியான கஞ்சன்சங்காவில் வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார். இது இப்பகுதியை அடைவதற்கான இவரின் இரண்டாவது முயற்சியாகும். நொய்டாவில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறிய 50 இவர் இதை படைத்துள்ளார்.
ரோமேனியா நாட்டிற்கான தற்போதைய தூதரான திரு.தங்லுரு டார்லாங் (IFS:1988) இப்பொறுப்புடன் சேர்த்து மால்டவோ குடியரசிற்கான இந்தியத் தூதராகவும், அல்பேனியா நாட்டிற்கான இந்தியத் தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தங்குமிடம் ரோமேனியோவின் பச்சரெஸ்ட்டில் உள்ளது.
அக்ராவிற்கான (கானா குடியரசின் தலைநகரம்) தற்போதைய இந்தியத் தூதரான திரு.பிரதீப் குமார் குப்தா, மாலி குடியரசிற்கான அடுத்த இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை கடல்பகுதியின், கடற்கரை மேம்பாட்டுப் பகுதியில் “பிரஸ்தன்“ எனும் பாதுகாப்புப் பயிற்சியை இந்திய கடற்படை நடத்தியது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இப்பயிற்சியானது, இந்திய கடற்படையின் மேற்குக் கடற்படைத் தலைமையகத்தால் நடத்தப்பட்டது.