TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 22 , 2022 915 days 486 0
  • நாட்டிலுள்ள 100 மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர்க் குழாய் வசதி வழங்கி, ஜல் ஜீவன் திட்டம் ஒரு புதிய மைல்கல்லினை எட்டியது.
    • இமாச்சலப் பிரதேசத்திலுள்ள சம்பா என்ற மாவட்டமானது, 100வது ‘ஹர் கர் ஜல்’ மாவட்டமாக இத்திட்டத்தில் இணைந்தது.
  • இந்தோனேசியா தலைமையிலான G20 அமைப்பின், கீழான முதலாவது G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் சந்திப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பங்கேற்றார்.
    • 17வது G20 அரசுத் தலைவர்கள் மற்றும் அரசுகளின் உச்சி மாநாடானது இந்தோனேசியாவின் பாலி எனுமிடத்தில் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.
  • ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாலி நகரிலிருந்து படைப் பிரிவுகளைத் திரும்ப அழைக்கும் ஒரு நடவடிக்கையைத் தொடங்குவது குறித்து பிரான்ஸ் நாடும் ஐரோப்பிய பிரிவில் உள்ள அதன் நட்பு நாடுகளும் அறிவித்துள்ளன.
    • இந்த முடிவானது சாஹேல் நகரிலுள்ள பிரான்ஸ் நாட்டின் பர்கானே படைப்பிரிவு மற்றும் தகுபா ஐரோப்பிய படைப் பிரிவு ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்