TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 4 , 2022 905 days 498 0
  • தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல் பற்றிய ஒரு விழிப்புணர்வு தினமானது உலகம் முழுவதும் மார்ச் 01 அன்று அனுசரிக்கப் படுகிறது.
    • ‘வெட்டிக் கொள்தல்’ மற்றும் வேண்டுமென்றே செய்து கொள்ளும் இதர பிற சுய தீங்கு முறைகள் போன்ற செயல்கள் குறித்த ஒரு விழிப்புணர்வைப் பரப்பச் செய்வதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘ஆரோக்கிய வனத்தினை’ திறந்து வைத்தார்.
    • ஆயுர்வேத தாவரங்களின் முக்கியத்துவத்தினையும் மனித உடலின் மீது அவை ஏற்படுத்தும் தாக்கங்களையும் ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழுவானது, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் தானியங்கு முறை மூலமான 20% என்ற அளவிலான அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஒப்புதல் வழங்க முடிவு செய்துள்ளது.
    • இவ்வாறு செய்வதால் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது தனது முதலீட்டைப் பங்கு விலக்கம் செய்து கொள்வதை எளிதாக்கும் என அரசு நம்புகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்