TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 5 , 2022 904 days 479 0
  • மத்தியக் கல்வித் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்ப விருதுகளை வழங்கினார்.
    • இந்த விருதானது இந்தியா முழுவதும் உள்ள 49 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
  • உலக கைபேசிப் பொருளாதார அறிக்கையானது ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற உலக கைபேசி மாநாட்டில் காட்சிப்படுத்தப் பட்டது.
    • உலகளவிலுள்ள 5G கைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கையானது 2022 ஆம் ஆண்டில் 1 பில்லியனை எட்டும் என இந்த அறிக்கை கூறுகிறது.
  • லுப்தான்சா நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமான சுவிஸ் ஏர்லைன்ஸ், சூரியசக்தி எரிபொருளை பயன்படுத்த உள்ள உலகின் முதல் விமான நிறுவனமாக மாற உள்ளது.
    • இதன் பயன்பாட்டினைச் சந்தைப்படுத்துவற்காக வேண்டி லுஃப்தான் மற்றும் ஸ்விஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சின்ஹீலியன் நிறுவனத்துடன் உத்திசார் ஒத்துழைப்பினை மேற்கொண்டுள்ளன.
  • ஸ்திரீ மனோரக்சா என்ற திட்டமானது NIMHANS பெங்களூரு என்ற நிறுவனத்துடன் இணைந்து மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தினால் தொடங்கப் பட்டுள்ளது.
    • இந்தியா முழுவதும் உள்ள பெண்களின் மனநலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் இத்திட்டமானது தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்