TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 15 , 2022 894 days 451 0
  • ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அம்மாநில நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த போது, பெண்களுக்கான சுஷ்மா சுவராஜ் விருதினை அறிவித்துள்ளார்.
    • சர்வதேச மற்றும் தேசியத் துறைகளில் பெண்கள் ஆற்றும் குறிப்பிடத்தக்கச் சாதனைகள் அல்லது வாழ்வின் பல்வேறு துறைகளில் ஆற்றும் பங்களிப்பிற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • பொலிவிய நாட்டு வீரரான மரியோ டெரான் சலாசர், கிழக்கு பொலிவியாவிலுள்ள சான்டா க்ரஷ் டி லா சியெரா என்னுமிடத்தில் தனது 80வது வயதில் காலமானார்.
    • இவர் 1967 ஆம் ஆண்டில் அர்ஜென்டினா – கியூப நாட்டுக் கொரில்லா முறையின் எர்னெஸ்டோ “சே” குவேராவினைக் கொன்றவராகக் கருதப்படுகிறார்.
  • மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் 2022 ஆம் ஆண்டின் 3வது NIC தொழில்நுட்ப மாநாட்டினைத் தொடங்கி வைக்க உள்ளார்.
  • கேரள அரசானது M.S. விஸ்வநாதன் அவர்களுக்கு நினைவிடம் அமைப்பதற்காக 1 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்