TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 20 , 2022 889 days 488 0
  • ஹைதராபாத் நகரில் அமைக்கப்பட உள்ள சர்வதேசக் குறைதீர்ப்பு மற்றும் நடுவண் மையத்திற்கான அடிக்கல்லினை இந்தியத் தலைமை நீதிபதி N.V. ரமணா அவர்கள் நாட்டினார்.
    • இந்த மையமானது ஒரு மாற்று வகையில் குறைதீர்ப்புக்கான இந்தியாவின் முதல் நடுவர் மையமாகும்.
  • ஆயுதப் பாதுகாப்புப் படைகளுக்கான ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தினைப் பற்றிய மத்திய அரசின் முடிவிற்கு உச்சநீதிமன்றம் ஆதரவு அளித்து உள்ளது.
    • இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதில் எந்தவித அரசியலமைப்பு மீறலும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியது.
  • ஸ்மிருதி இராணி, தேசியக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் 17வது நிறுவன தினத்தில் (2022ஆம் ஆண்டு மார்ச் 01) அதன் புதிய முழக்கத்தினை அறிமுகப் படுத்தினார்.
    • குழந்தைகளின் நலனிலேயே தேசத்தின் வலுவான ஒரு அடித்தளம் உள்ளதால் நமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கச் செய்வதை இந்தப் புதிய முழக்கம் ஊக்குவிக்கிறது.
  • இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியத்தினைப் பாதுகாத்து மேம்படுத்துவதில் உதவி வழங்குவதற்காக இந்தியத் தங்கும் விடுதிகள் நிறுவனமானது (Indian Hotels Company Ltd) யுனெஸ்கோவுடன் கை கோர்த்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்