TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 23 , 2022 886 days 493 0
  • இந்திய அமெரிக்கப் பொதுச் சுகாதார நிபுணரான டாக்டர் ஆசிஷ் ஜா அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தில் கோவிட்-19 எதிர்ப்பு நடவடிக்கைக்கான ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்க உள்ளார்.
  • பாஜகவின் N. பிரேன் சிங் மணிப்பூரின் முதலமைச்சராகத் தொர்ந்து இரண்டாவது முறையாக, பதவியேற்றார்.
  • கர்நாடக வங்கியானது, தனியார் துறை வங்கிகள் பிரிவில் “ஆண்டின் சிறந்த குறு, சிறு மற்றும் நடுத்தர வங்கி” என்ற விருதினை வென்றுள்ளது.
    • இந்த விருதானது புதுடெல்லியில் ASSOCHAM அமைப்பினால் தொடங்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான 8வது சிறந்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் விருது வழங்கும் விழா மற்றும் உச்சி மாநாட்டில் வழங்கப் பட்டது.
  • 14வது இந்திய-ஜப்பானிய வருடாந்திர உச்சி மாநாடானது புதுடெல்லியில் நடத்தப் பட்டது.
    • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்