TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 24 , 2022 885 days 453 0
  • கால்பந்து விளையாட்டில் ஹைதராபாத் FC அணியானது இந்தியன் சூப்பர் லீக் என்ற போட்டியில் தனது முதல் பட்டத்தை வென்றது.
    • இந்த அணி பெனால்டி சுற்றில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது.
  • களவு போன நூற்றாண்டு காலப் பழமையான சுமார் 29 கலைப் பொருட்களை ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா மீட்டுள்ளது.
    • இந்த கலைப்பொருட்கள் அந்தந்த மாநிலங்களின் கோயில்களிடம் ஒப்படைக்கப் படும்.
  • குவைத் நாட்டில் நிலவும் வெப்பநிலை 53.2 டிகிரி செல்சியசை (127.7 டிகிரி பாரன்ஹீட்) எட்டியது.
    • இதனால் இந்த நாடு புவியின் வெப்பமான நாடுகளுள் ஒன்றாக மாறியது.
  • பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் புஷ்கர் சிங் தாமி, தொடர்ந்து 2வது முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.
    • தாமி இந்த மலைப்பாங்கான மாநிலத்தின் 13வது முதல்வர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்