சிலி நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநரான மரியோ மார்ஷல் 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய வங்கிகள் விருது வழங்கும் விழாவில் ஆண்டின் சிறந்த ஆளுநருக்கான விருதினை வென்றுள்ளார்.
பான்கோ சென்ட்ரல் டி சிலி (Banco Central de Chile) என்பது சிலி நாட்டின் மத்திய வங்கியின் பெயராகும்.
வடகொரிய நாடானது ஹவாசாங் – 17 (Hwasong-17) எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் உந்து விசை ஏவுகணையினை பரிசோதனை செய்துள்ளது.
இந்த ஏவுகணையானது உலகின் மிகப்பெரிய, திரவ எரிபொருளால் இயங்கும் வகையிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் உந்துவிசை ஏவுகணையாகும்.
5வது வருடாந்திர மங்களூரு கம்பளா பந்தயமானது பங்க்ரா குளூர் எனுமிடத்திலுள்ள கோல்டு பின்ச் நகர மைதானத்தில் நடைபெற உள்ளது.
இது கர்நாடகாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு எருமைப் பந்தயமாகும்.