TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 2 , 2022 843 days 483 0
  • உலகின் மிகப்பெரிய விரைவுப் போக்குவரத்து நிறுவனமான FedEx நிறுவனம் தனது புதிய தலைமைச் செயல் அதிகாரியாக இந்திய அமெரிக்கரான ராஜ் சுப்ரமணியம் என்பவரை நியமிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
    • இந்த நிறுவனமானது இதற்கு முன்பு ஃபிரடெரிக் W ஸ்மித் என்பவரின் தலைமையில் இருந்தது.
  • டொராண்டோ நகரில் நடைபெற்ற போட்டியில் ஜமைக்கா அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 36 ஆண்டுகளில் முதல் முறையாக கத்தார் நாட்டில் நடைபெறும் 2022 ஆம் ஆண்டின் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிக்கு கனடா தகுதி பெற்று உள்ளது.
    • 2022 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும் 20வது அணியாக கனடா அணி மாறியது.
  • உலகம் முழுவதும் உள்ள மக்களில் பெரும்பாலானோரைப் பாதிக்கும் மனநலக் கோளாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக வேண்டி மார்ச் 30 ஆம் தேதியன்று உலக இருமுனை (இரு துருவம்) தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
    • இந்த ஆண்டு உலக இருமுனைத் தினத்தின் கருத்துரு, #BipolarTogether என்பதாகும்.
  • உலக காப்புத் தினமானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 31 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.
    • தொழில்நுட்பத்தை நாம் அதிகம் சார்ந்து இருப்பதால், நமது விலை மதிப்பற்ற டிஜிட்டல் (எண்ணிம) ஆவணங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை இந்த தினம் நமக்கு நினைவூட்டுகிறது.
  • சர்வதேச போதைப்பொருள் பரிசோதனைத் தினமானது 2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 31 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
    • இந்தத் தினமானது மருந்துகளின் தீங்கு குறைப்பு முயற்சிகளை ஊக்குவிப்பது மற்றும் போதைப் பொருள் தொடர்பான அபாயங்களைக் குறைக்கச் செய்வது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • காட்டு விலங்குகளுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கிய உலகின் முதல் நாடாக தென் அமெரிக்க நாடான ஈக்வடார் மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்