TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 17 , 2022 828 days 473 0
  • மத்திய அமைச்சர் G. கிஷான் ரெட்டி, புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசியக் கலை மையத்தில் ‘ஈஷான் மந்தன்’ எனப்படும் ஒரு மூன்று நாட்கள் அளவிலான வட கிழக்குப் பகுதிக்கான ஒரு திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.
    • மூன்று நாட்கள் வரை நடைபெறும் ஈஷான் மந்தன் நிகழ்ச்சியானது வடகிழக்கு இந்தியாவின் வளமான இனம் மற்றும் வண்ணமயமானச் சிறப்பம்சங்களை கொண்டாடும் ஒரு தினமாகும்.
  • 2023 ஆம் ஆண்டு ஸ்ட்ரீட் சைல்ட் அல்லது தெருவோரக் குழந்தைகளுக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு இந்தியா தயாராக உள்ளது.
    • ஸ்ட்ரீட் சைல்ட் யுனைடெட் மற்றும் சேவ் தி சில்ட்ரன் இந்தியா ஆகிய சில அமைப்புகளால் இந்த உலகக் கோப்பைப் போட்டியானது நடத்தப்படுகிறது.
  • ஆப்கானிஸ்தான் முழுவதும் ஓபியம் பாப்பி எனப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பயிரிடுவதற்கு தலிபான் அமைப்பு தடை விதித்துள்ளது.
    • ஆப்கானிஸ்தான் நாடானது உலகிலேயே அதிகளவு கஞ்சா உற்பத்தி செய்யும் நாடாக, உலகளாவிய உற்பத்தியில் 85 சதவீதம் என்ற அளவில், உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்