TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 21 , 2022 823 days 422 0
  • இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஷிங்கு லா கணவாயில் உலகின் மிக உயரிய சுரங்கப் பாதையை எல்லைச் சாலைகள் அமைப்பானது கட்டமைக்கவுள்ளது.
    • இது இமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் 16,580 அடி உயரத்தில் நிறுவப்படும்.
  • இளம் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையினைச் சேர்ந்த D. குகேஷ் ஸ்பெயினில் நடைபெற்ற 48வது லா ரோடா சர்வதேச ஓபன் சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றார்.
    • இதில் R. பிரக்ஞானந்தா 3வது இடத்தினைப் பெற்றார்.
  • அணுசக்தி ஆணையத்தின் தலைவர் பொறுப்பினை வகிக்கும் கமலேஷ் நீல்கந்த் வியாசின் பதவிக் காலத்தினை மேலும்  ஓர் ஆண்டிற்கு நீட்டிக்க அரசு அனுமதி வழங்கிள்ளது.
    • 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இப்பதவிக்கு முதன்முறையாக நியமிக்கப் பட்ட இவரது பதவிக் காலமானது 2வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்