TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 29 , 2022 815 days 406 0
  • பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக ஒரு கார்பன் விலைக் கொள்கையை ஏற்றுக் கொண்ட அமெரிக்காவின் முதல் பெரிய புதைபடிவ எரிபொருள் உற்பத்தி மாகாணமாக பென்சில்வேனியா மாறியுள்ளது.
    • நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மின் நிலையங்கள் அவை வெளியிடும் ஒவ்வொரு டன் கார்பன் டை ஆக்சைடுக்கும் மதிப்புகளைப் பெற வேண்டிய நிபந்தனைகள் உள்ள 11 மாகாணங்களுள் ஒன்றாக இது இணைகிறது.
  • மெனோர்கா ஓபன் என்ற சதுரங்கப் போட்டியில் ஒரு இந்தியக் கிராண்ட் மாஸ்டரான  சென்னையின் D.குகேஷ் வெற்றி பெற்றார்.
    • இவர் சமீபத்தில் ஸ்பெயினின் லா ரோடா என்ற நகரில் நடைபெற்ற 48வது ஓபன் அஜெட்ரெஸ் லா ரோடா சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றார்.
  • விராட் கோலிக்குப் பிறகு, இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் 6,000 ரன்கள் குவித்த  இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றார்.
    • மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தவான் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
  • இராணுவ ஆட்சியின் கீழ் உள்ள மியான்மர் நாட்டில் உள்ள நீதிமன்றமானது, முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீது ஊழல் குற்றத்தினைச் சாட்டி அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்