TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 5 , 2022 809 days 441 0
  • ரவீந்திர ஜடேஜா ஏப்ரல் 30 ஆம் தேதியன்று, தான் வகித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பினைத் துறந்ததையடுத்து, 2022 ஆம் ஆண்டு மே 01 அன்று  அந்த அணியின் தலைவராக M.S.தோனி மீண்டும் பொறுப்பேற்றார்.
  • இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிடையே  2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதியன்று கையெழுத்தான விரிவானப் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தமானது 2022 ஆம் ஆண்டு மே 01 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
    • இந்த ஒப்பந்தமானது பல்வேறு பொருட்கள் மீதான சுங்க வரிக்கு விலக்கு அளித்து உள்ளது.
  • அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வு அமைப்பானது, இந்திய-அமெரிக்கத் தகவல் தொழில்நுட்ப நிபுணரான நந்த் முல்சந்தனி என்பவரை அதன் முதலாவது தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக நியமித்துள்ளது.
  • மைதானம் - கேரளாவில் கால்பந்தாட்டப் போட்டிகளின் கதை' எனும் முதல் இந்திய விளையாட்டு குறித்த ஆவணப் படமானது 2022 ஆம் ஆண்டு மே 01 அன்று FIFA+ ஊடகத்தில் நேரலையாக ஒளிபரப்பப் பட்டது.
  • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவினைச் சேர்ந்த P.V. சிந்து தனது இரண்டாவது ஆசிய வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
  • இந்தியாவின் புதிய வெளியுறவுத் துறைச் செயலாளராக வினய் மோகன் குவாத்ரா பொறுப்பேற்றுள்ளார்.
    • இப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவினை அடுத்து இவர் இப்பொறுப்பினை ஏற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்