TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 11 , 2022 803 days 509 0
  • மணிப்பூர் மாநிலத்தில் வாழும் பௌமாய் பழங்குடியினர், போதைப் பொருளுக்கு எதிரான அம்மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக, பௌமாய் மக்கள் வசிக்கும் பகுதிகள் போதைப் பொருள் இல்லாத ஒரு மண்டலமாக திகழும் என்று அறிவித்துள்ளனர்.
  • மே 09 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதன் மதிப்பிழப்பினை அதிகரித்து வரலாறு காணாத அளவில் 77.42 என்ற குறைந்த மதிப்பினைத் தொட்டது.
  • இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சே மே 09 ஆம் தேதியன்று ராஜினாமா செய்ததையடுத்து, இலங்கை அரசியலமைப்பின் படி அந்நாட்டு அமைச்சரவை கலைக்கப் பட்டது.
  • இந்தியக் கிராண்ட்மாஸ்டர் D.குகேஷ், புன்டா ப்ரைமாவில் நடைபெற்ற முதலாவது செசபிள் சன்வே ஃபார்மென்டெரா ஓபன் செஸ் போட்டியில் (2022) சாம்பியன் பட்டம் வென்றார்.
    • இது இவர் பெற்ற தொடர்ச்சியான மூன்றாவது (ஹாட்ரிக்) பட்டம் ஆகும்.
  • லார்சன் & டியூப்ரோ குழுமத்தின் கீழான பட்டியலிடப்பட்ட இரண்டு சுயாதீன தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனங்களான L&T இன்போடெக் மற்றும் மைண்ட் ட்ரீ ஆகியவை இந்தியாவின் ஐந்தாவது பெரிய தகவல் தொழில்நுட்பச் சேவை வழங்கு நிறுவனமாகத் திகழ உள்ள ஒரு மாபெரும் நிறுவன இணைப்பு குறித்து அறிவித்தது.
    • இந்த ஒருங்கிணைந்த நிறுவனமானது, "LTIMindtree" என்று அழைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்