TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 15 , 2022 799 days 370 0
  • மேடவாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள 2.3 கிமீ நீளமான மூன்று தடங்கள் கொண்ட சென்னையின் மிக நீளமான ஒருவழிப் பாதை மேம்பாலத்தினை தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
    • இது தாம்பரத்திலிருந்து வேளச்சேரி வரை வாகனங்கள் நெரிசலின்றி வேகமாகச் செல்வதற்கு வழி அளிக்கும்.
  • இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப் படைகளுக்கு எதிரான தனது வெற்றியைக் கொண்டாடும் வகையில் சோவியத் யூனியன் மே 09 ஆம் தேதியினை ரஷ்யாவின் வெற்றி தினமாகக் கொண்டாடுகிறது.
  • ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மற்றும் மேலாண்மை இயக்குனராக (MD) காம்ப்பெல் வில்சன் என்பவரை டாடா குழுமம் நியமித்துள்ளது.
  • சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் போது உக்ரைன் நாட்டினை விடுதலைப் பெறச் செய்து அதன் முதல் அதிபராகப் பணியாற்றிய லியோனிட் கிராவ்சுக் காலமானார்.
  • 2022 ஆம் ஆண்டு தாய்லாந்து டேலண்ட் கோப்பை போட்டியில் முதலிடத்தைப்  பிடித்து, சென்னையைச் சேர்ந்த இளம் வாகன ஓட்டியான சர்தக் சவான், ஹோண்டா ரேசிங் இந்தியா நிறுவனத்தின் சார்பாக புதிய சாதனையைப் படைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்