மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் நகரில் இந்தியாவின் முதல் 'அமிர்த சரோவர்' திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
லூயிஸ் உய்ட்டன் என்ற ஆடம்பர நுகர்வுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கான இந்தியாவின் முதல் விளம்பரத் தூதராக நடிகை தீபிகா படுகோன் அறிவிக்கப் பட்டு உள்ளார்.
லக்பா ஷெர்பா 10வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார்.
இவரது இந்த 10வது முறையிலான சாதனையானது இத்தகைய சாதனையைப் படைத்த முதல் பெண்மணி என்ற பெருமையை அவருக்குப் பெற்று தந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் சமீபத்தில் காலமானார்.
எனவே ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு புதிய அதிபராக முகமது பின் சயீத் அல் நஹ்யான் நியமிக்கப் பட்டுள்ளார்.