TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 20 , 2022 794 days 503 0
  • ஆஸ்திரேலியவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சமீபத்தில் காலமானார்.
    • இவர் 26 டெஸ்ட் போட்டிகளிலும், 198 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
  • மே 15 ஆம் தேதியன்று திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மாணிக் சாஹா பதவியேற்றார்.
    • பிப்லப் குமார் தேப் என்பவர் பதவி விலகியதையடுத்து இவர் முதல்வராக நியமிக்கப் பட்டார்.
  • குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் ஜமைக்காவிற்குப் பயணம் மேற்கொண்டு ள்ளார்.
    • இந்தக் கரீபிய நாட்டிற்குப் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் இவரே ஆவார்.
  • ராஜீவ் ரஞ்சன் மற்றும் சித்திகாந்தா பட்டநாயக் ஆகியோரை இந்திய ரிசர்வ் வங்கி அதன் நிர்வாக இயக்குநர்களாக நியமித்துள்ளது.
  • தென்மேற்குப் பருவமழை மே 16 ஆம் தேதியன்று அந்தமான் & நிக்கோபார் தீவுகளை  நோக்கி நகரத் தொடங்கியது.
  • தென் கொரிய அணியானது சீன அணியை வீழ்த்தி 2022 ஆம் ஆண்டு பேட்மிண்டன் உபெர் கோப்பையை  வென்றது
  • ரஷ்ய அச்சுறுத்தலுக்கு எதிராக நேட்டோ அமைப்பின் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிப்பதாக ஸ்வீடன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்