இண்டர் குளோப் எனப்படும் வான்வழிப் போக்குவரத்து (இண்டிகோ) நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவானது, பீட்டர் எல்பர்ஸை அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான சுனில் அரோரா, கிராம் உன்னதி வாரியத்தின் புதிய நிர்வாகம் சாரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரலாற்றில் முதன்முறையாக, 96 வயதான இராணி எலிசபெத்துக்குப் பதிலாக பிரிட்டன் இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து பாராளுமன்றத் கூட்டத்தின் தொடக்க விழாவில் வழக்கமாக இராணி வழங்கும் உரையை வழங்கினார்.
ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஹோல்சிம் எனப்படும் பன்னாட்டு நிறுவனம் அம்புஜா சிமெண்ட்ஸ் போன்ற இந்திய நிறுவனங்களின் மீது கொண்டுள்ள பங்குகளை அதானி குழுமம் வாங்க உள்ளது.
பிரிட்டன் நாட்டினைச் சேர்ந்த மலை ஏறும் வீரரான கென்டன் கூல் என்பவர், உலகின் மிக உயரமான மலையை 16வது முறையாக ஏறி, அதிகமுறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் வெளிநாட்டு மலை ஏறும் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.