TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 2 , 2022 781 days 516 0
  • K.V. ரகுபதி தனது ‘The Mountain is Calling’ என்றப் புத்தகத்திற்காக சர்வதேசப் பனோரமா கோல்டன் விருதை வென்றுள்ளார்.
  • குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் நாரன்புரா பகுதியில் அமைக்கப்பட உள்ள ஒரு புதிய சர்வதேச விளையாட்டு வளாகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் சா அடிக்கல் நாட்டினார்.
  • அறிமுக இயக்குனரான சைம் சாதிக் இயக்கிய பாகிஸ்தான் நாட்டுத் திரைப்படமான ‘Joyland’ 75வது கேன்ஸ் திரைப்பட விருது விழாவின் வரையறை இல்லாத சாதனைப் பிரிவில் ஜூரி பரிசை வென்றது.
  • ஸ்பெயின் நாட்டின் கால்பந்து அணியான ரியல் மாட்ரிட், 2022 ஆம் ஆண்டின் UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் லிவர்பூல் என்ற அணியை வீழ்த்தி, 14வது ஐரோப்பியச் சாம்பியன்  பட்டத்தை வென்றது.
  • சர்வதேசப் பாலியல் தொழிலாளர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 2 அன்று அனுசரிக்கப் படுகிறது.
    • இந்தத் தினமானது பாலியல் தொழிலாளர்களைக் கௌரவிக்கச் செய்வதோடு, அடிக்கடிச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் அவர்களின் வேலை நிலைக்கு ஒரு அங்கீகாரத்தினை அளிக்கிறது.
  • 15வது இந்தியப் பிரீமியர் லீக் போட்டியின் நிறைவு விழாவின் போது மாபெரும் ஜெர்சியை (66 x 44 மீட்டர் அளவுள்ள மேலங்கியை) காட்சிப்படுத்தியதற்காக, இந்தப் போட்டி கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
  • 17வது ஆவணப்படம், குறும்படம் மற்றும் இயங்குப் படங்கள் ஆகியப் படங்களுக்கான மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவானது (MIFF-2022) மும்பையில் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்