TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 4 , 2022 779 days 450 0
  • 2022 ஆம் ஆண்டு மே மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1.41 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.
    • இது ஏப்ரல் மாத வசூலை விட 16% குறைவாகும்.
  • அடுத்த நான்கு ஆண்டுகளில் குறைந்தபட்சம் நிலக்கரியில் இருந்து செய்யப்படும் 81 மின் உற்பத்தி நிலையங்களைக் குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
  • சனந்த் நகரில் உள்ள ஃபோர்டு பயணியர் வாகன உற்பத்தி அலகினைக் கையகப் படுத்துவதற்காக ஃபோர்டு இந்தியா மற்றும் குஜராத் அரசுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு முத்தரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், ஹங்கேரி அரசு சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் உறுப்பினரானது.
  • ஜூன் 21 ஆம் தேதியன்று இந்தியாவிலும் உலகெங்கிலும் அனுசரிக்கப்படும் எட்டாவது சர்வதேச யோகா தினத்தின் கருத்துருவாக 'மனித குலத்திற்காக யோகா' என்பது தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • KK என்று அழைக்கப்படும் பாலிவுட் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் சமீபத்தில் கொல்கத்தாவில் காலமானார்.
  • கனடா அரசானது, பல தசாப்தங்களாக இல்லாத வகையில், நாட்டின் கைத்துப்பாக்கி கொள்முதல் மற்றும் அதன் விற்பனையினை "முடக்குதல்" உள்ளிட்ட "சில கடுமையான துப்பாக்கி உபயோகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை" செயல் படுத்துகின்ற ஒரு புதியச் சட்டத்தை நிறைவேற்றியது.
  • நார்வே செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் சீனாவின் வாங் என்பவரை வீழ்த்தி தரவரிசைப் பட்டியலில் தனது முன்னிலையிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்