TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 6 , 2022 777 days 352 0
  • ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவை குரோஷியா யூரோவை அந்நாட்டின் நாணயமாகப் பயன்படுத்துவதற்குத் தங்களது ஒப்புதலை அளித்துள்ளன.
    • இது 2023 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல்  யூரோவைப் பயன்படுத்தும்.
  • 75வது லோகார்னோ திரைப்பட விருது விழாவின் போது இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரான கீதாஞ்சலி ராவ் என்பவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.
  • இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் அகிலப் பாரதிய ஆயுர்வேத மகா சம்மேளனத்தின் 59வது மகா அதிவேஷன் என்ற நிகழ்வினைத் தொடங்கி வைத்தார்.
  • சச்சின் டெண்டுல்கர் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியத்தின் (UNICEF) ‘நல்லெண்ணத் தூதராக’ 20வது ஆண்டாகத் தொடர்ந்துச் செயல்பட உள்ளார்.
  • 14 வயது இந்திய அமெரிக்கரான ஹரிணி லோகன் 2022 ஆம் ஆண்டு ஸ்கிரிப்ஸ் தேசிய எழுத்துக் கூறு போட்டியில் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்