TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 7 , 2022 776 days 453 0
  • ஜேவியர் ஒலிவன், மெட்டா நிறுவனத்தின் (பேஸ்புக்) புதிய தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார் .
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவின் ஜெவார் என்ற நகரில் நிறுவப்பட உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தைக் கட்டமைப்பதற்கான ஒப்பந்தத்தை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
  • மத்திய இளையோர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், உலக சைக்கிள் தினத்தன்று நாடு தழுவிய ‘ஃபிட் இந்தியா ஃப்ரீடம் ரைடர் சைக்கிள் பேரணியை' தொடங்கி வைத்தார்.
  • ஒடிசாவின் ரூர்கேலாவைச் சேர்ந்த ஸ்ரேயா லென்கா என்ற 18 வயது சிறுமி, தென் கொரியாவின் ஒரு பிரபல பாப் இசைக்குழுவான பிளாக்ஸ்வானின் ஐந்தாவது உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ராஜஸ்தானின் கரௌலி மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்காக ‘அஞ்சல்’ எனப் படும் ஒரு சிறப்புச் சுகாதாரப் பாதுகாப்பு அபியான் திட்டமானது தொடங்கப் பட்டு உள்ளது.
    • இதன் மூலம் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டப் பெண்கள் பயனடைந்துள்ளனர்.
  • ரஃபேல் நடால் தனது 14வது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றதன் மூலம் 22வது கிராண்ட்ஸ்லாம் கோப்பையைக் கைப்பற்றிச் சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்