டிஜிட்டல் மின்னணுவியல் தொடர்பான உலகின் முதல் ‘பழுதுபார்க்கும் உரிமை' சட்டம் நியூயார்க் சட்டமன்றத்தால் நிறைவேற்றப் பட்டது.
பிரான்ஸின் சாட்டௌரோக்ஸில் நடைபெற்ற பாரா ஷூட்டிங் உலகக் கோப்பைத் தொடரில்பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை அவானி லெகாரா உலகச் சாதனையுடன் தங்கம் வென்றார்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ‘‘Loktantra ke Swar’ & ‘The Republican Ethic என்ற புத்தகங்களை வெளியிட்டார்.
இதில்இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை 2035ஆம் ஆண்டிற்குப் பிறகு விற்பனை செய்வதைத் தடை செய்ய ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துஉள்ளனர்.
மின்சார வாகனங்களின் ஒரு விரைவான வளர்ச்சியின் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை முடுக்கி விடுவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் முதல் மனித விண்வெளிப் பயணமான ‘ககன்யான்’ மற்றும் முதல் மனிதப் பெருங்கடல் பயணத்தைத் தொடங்கும் தனித்துவமான சிறப்பை இந்தியா அடையும்.
இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் NH53 என்ற நெடுஞ்சாலையில் 105 மணி நேரம் 33 நிமிடங்களில் ஒரே பாதையில் 75 கிலோமீட்டர் பிட்மினஸ் சாலையை அமைத்துஒரு புதிய கின்னஸ் சாதனையினைப் படைத்துள்ளது.
NH 53 சாலையானது குஜராத்தில் உள்ள ஹஜிராவையும் ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுகத்தையும் இணைக்கிறது.