TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 11 , 2022 772 days 384 0
  • டிஜிட்டல் மின்னணுவியல் தொடர்பான உலகின் முதல் ‘பழுது பார்க்கும் உரிமை' சட்டம் நியூயார்க் சட்டமன்றத்தால் நிறைவேற்றப் பட்டது.
  • பிரான்ஸின் சாட்டௌரோக்ஸில் நடைபெற்ற பாரா ஷூட்டிங் உலகக் கோப்பைத் தொடரில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை அவானி லெகாரா உலகச்  சாதனையுடன் தங்கம் வென்றார்.
  • மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ‘‘Loktantra ke Swar’ & ‘The Republican Ethic என்ற புத்தகங்களை வெளியிட்டார்.
    • இதில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரைகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
  • புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை 2035 ஆம் ஆண்டிற்குப் பிறகு விற்பனை செய்வதைத் தடை செய்ய ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து ள்ளனர்.
    • மின்சார வாகனங்களின் ஒரு விரைவான வளர்ச்சியின் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை முடுக்கி விடுவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் முதல் மனித விண்வெளிப் பயணமான ‘ககன்யான்’ மற்றும் முதல் மனிதப் பெருங்கடல் பயணத்தைத் தொடங்கும் தனித்துவமான சிறப்பை இந்தியா அடையும்.
  • இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் NH53 என்ற நெடுஞ்சாலையில் 105 மணி நேரம் 33 நிமிடங்களில் ஒரே பாதையில் 75 கிலோமீட்டர் பிட்மினஸ் சாலையை அமைத்து ஒரு புதிய கின்னஸ் சாதனையினைப்  படைத்துள்ளது.
    • NH 53 சாலையானது குஜராத்தில் உள்ள ஹஜிராவையும் ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுகத்தையும் இணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்