TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 12 , 2022 771 days 424 0
  • மரண தண்டனையை ரத்து செய்ய மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
    • 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில், சாம்பியா நாடும் மரண தண்டனையை ரத்து செய்யும் திட்டத்தை அறிவித்தது.
  • ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிருஷ்ணா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்து உள்ளது.
  • பாரத ஸ்டேட் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநராக அலோக் குமார் சவுத்ரி என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
    • சவுத்ரியின் நியமனத்தைத் தொடர்ந்து, பாரத ஸ்டேட் வங்கியில் தற்போது நான்கு நிர்வாக இயக்குநர்கள் உள்ளனர்.
  • இந்துக்களின் ஒரு புனிதமான பண்டிகையான சிதல் சஸ்தி ஒடிசாவில் கொண்டாடப் படுகிறது.
    • இந்த ஒரு வார காலச்  சிறப்புத் திருவிழாவானது, சிவன் மற்றும் பார்வதி தேவியின் திருமணத்தைச் சிறப்பித்துக் காட்டுகிறது.
  • உலகளாவிய முதன்மை அலுமினியத் தொழில்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே அமைப்பான சர்வதேச அலுமினிய நிறுவனமானது, அதன் புதிய தலைவராக சதீஷ் பை என்பவரை நியமிப்பதாக அறிவித்துள்ளது.
    • இவர் தற்போது, உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த அலுமினிய உற்பத்தியாளர் நிறுவனங்களுள் ஒன்றான ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
  • பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள வால்மீகி புலிகள் காப்பகத்தில் யானைகள் மீட்பு மையத்தினை பீகார் வனத்துறை நிறுவியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்