TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 20 , 2022 763 days 413 0
  • தொழில்துறை அமைப்பான இந்தியச் செல்லிடப் பேசி இயக்குநரகச் சங்கத்தின் 2022-23 ஆம் ஆண்டிற்கான புதியத் தலைவராக ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் என்ற நிறுவனத்தின் தலைவர் பிரமோத் கே மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் கையகப்படுத்துதல் மற்றும் நிலை நிறுத்தலுக்கான துணை உள் செயலாளர் பதவிக்கு ஓர் இந்திய-அமெரிக்கரான ராதா ஐயங்கார் பிளம்ப் என்பவர் பரிந்துரைக்கப் பட்டுள்ளார்.
  • ஆசியான்-இந்தியா ஆகியவற்றுக்கு இடையேயானப் பேச்சுவார்த்தை உறவுகளின் 30 ஆம் ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில் ஒரு  சிறப்பு ஆசியான்-இந்திய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பினை (SAIFMM) இந்தியா நடத்தியது.
  • உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள், பணவியல் கொள்கைகளை 1980 ஆம் ஆண்டுகளில் இருந்து இதுவரை இல்லாத வகையில் மிகவும் வியத்தகு முறையில் கடுமையாக்கி வருகின்றன.
    • பணவீக்கத்தில் ஏற்படும் எதிர்பாராத உயர்வினைச் சமாளிப்பதற்கான ஒரு முயற்சியில் பொருளாதார மந்தநிலை மற்றும் நிதிச் சந்தைகளை சீர்குலைக்கச் செய்கின்ற வகையில் இந்த முடிவுகள் இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்