TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 1 , 2022 752 days 412 0
  • மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) புதியத் தலைவராக இந்திய வருவாய்ப் பணி அதிகாரி நிதின் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளராகவும், அணுசக்தி விவகாரங்கள் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான பிரதமரின் சிறப்புத் தூதராகவும் பணியாற்றிய ஷியாம் சரண் இந்திய சர்வதேச மையத்தின் தலைவராக தற்போது பொறுப்பேற்றுள்ளார்.
  • இந்திய அரசு சாரா வர்த்தகச் சங்கம் மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனமான நாஸ்காம், ஒருங்கிணைந்தச் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பயன்பாட்டுத் திட்டத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 500 பில்லியன் டாலர்களாக உயர்த்த முடியும் என்று கூறுகிறது.
    • நாஸ்காம், EY நிறுவனத்துடன் இணைந்து மைக்ரோசாப்ட், EXL மற்றும் Capgemini ஆகியவற்றின் ஆதரவுடன், செயற்கை நுண்ணறிவு ஏற்பின் துறை சார்ந்த ஒரு முன்னேற்றத்தினைக் கண்காணிப்பதற்காக செயற்கை நுண்ணறிவு ஏற்புக் குறியீடு என்ற ஒன்றினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • சர்வதேசப் பளு தூக்குதல் கூட்டமைப்பின் (IWF) தலைவராக ஈராக் நாட்டின் அரசு அதிகாரி முகமது ஜலூத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • 44 ஆண்டுகளாக சர்வதேசப் பளு தூக்குதல் கூட்டமைப்பினைக் கட்டுப்படுத்தி வந்த தாமஸ் அஜான் 2020 ஆம் ஆண்டில் பதவி விலகியதையடுத்து இவர் அதன் முதல் நிரந்தர தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
  • மெக்சிகோவில் நடைபெற்ற சர்வதேசப் பளுதூக்குதல் கூட்டமைப்பின் இளைஞர்களுக்கான பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆந்திராவைச் சேர்ந்த குருநாயுடு சனாபதி தங்கம் வென்றார்.
    • இந்தப் போட்டியில் தங்கம் வென்ற இந்தியாவின் முதல் பளுதூக்கும் வீரர் என்ற ஒரு பெருமையை இவர் பெற்றுள்ளார்.
  • அசாமின் கவுகாத்தியில் உள்ள நிலாச்சல் மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற காமாக்யா கோவிலில், நான்கு நாட்கள் வரையில் நடைபெறும் அம்புபாச்சி மேளா விழா தொடங்கியது.
  • தென் கொரிய நாடானது, உள்நாட்டிலேயேத் தயாரித்த நூரி என்ற ஏவுகலனைப் பயன்படுத்தி தனது முதல் செயற்கைக் கோளைச் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தச் செய்தது.
  • பிரகதி மைதான் ஒருங்கிணைந்தப் போக்குவரத்து வழித் தடத் திட்டத்தைப் பிரதமர் அவர்கள் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
    • புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உருவாக்கப்பட்டு வரும் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்திற்கு இடையூறு இல்லாத மற்றும் சுமூகமான முறையில் சென்றடைவதற்கான வழித் தடத்தினை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்