TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 4 , 2022 749 days 430 0
  • டென்னிஸ் வரலாற்றிலேயே நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் சேர்த்து 80 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பெற்றார்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் "நமது" நிலங்கள், நீர்வளங்கள் மற்றும் பெருங்கடல்களைக் குறைந்த பட்சம் 30% வரை பாதுகாத்தல் என்ற ஒரு இலக்கை எட்டும் என்று சர்வதேச நாடுகளுக்கு இந்தியா உறுதியளித்தது.
  • 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இங்கிலாந்தில் படிப்பதற்காக 75 இந்திய மாணவர்களுக்கு  முழு நிதியுதவி உதவித் தொகைகளை வழங்கச் செய்வதற்காக வேண்டி, இந்தியாவில் உள்ள முன்னணி வணிக நிறுவனங்களுடன் ஒரு கூட்டுறவை மேற்கொள்ள உள்ளதாக ஐக்கிய இராஜ்ஜிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
  • ஆம் ஆத்மி அரசானது தனது முதல் பஞ்சாப் மாநில நிதிநிலை அறிக்கையில், 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு மாதமும் 300 அலகுகள் வரை இலவச மின்சாரம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற, அமெரிக்காவினைச் சேர்ந்த சிட்னி மெக்லாலின், அமெரிக்காவின் ஓரிகானின் யூஜினில் நடைபெற்ற அமெரிக்கச் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தின் இறுதிப் போட்டியில், அதனை 51.41 வினாடிகளில் கடந்து தனது சொந்த உலகச் சாதனையை முறியடித்தார்.
  • டெல்லியில் உள்ள முன்னணி ஆளில்லா விமான உற்பத்தி இயங்குதள நிறுவனமான ஐஜி ட்ரோன்கள் ஏர்வார்ட்ஸ் அமைப்பினால் வழங்கப்படும் "சிறந்த ஆளில்லா விமான அமைப்பு - தொடக்க நிறுவனங்கள் பிரிவு" என்ற விருதைப் பெற்றுள்ளது.
    • ஏர்வார்ட்ஸ் என்பது உலகெங்கிலும் உள்ள நேர்மறையான ஆளில்லா விமானப் பயன்பாட்டு நிகழ்வுகளின் பரவலை அடையாளம் காணவும், அதனை அங்கீகரித்து, அதில் வெற்றி பெறுவதற்காகவும் வேண்டி அர்ப்பணிக்கப்பட்ட முதல் பரந்து பட்ட உலகளாவிய விருதுகள் திட்டமாகும்.
  • கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு U23 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், டோக்கியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தீபக் புனியா 86 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் இண்டஸ்ட்ரீஸ் (சில்லறை விற்பனைத் தொழில்துறை) என்ற நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.
    • ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்