TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 13 , 2022 740 days 413 0
  • TVS சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் R.தினேஷ், இந்தியத் தொழில்துறையின் தலைவராக 2022-2023 ஆகிய ஆண்டுகளுக்கு நியமிக்கப் பட்டுள்ளார்.
  • நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், G20 அமைப்பின் தலைமைப் பொறுப்பினை இந்தியா ஏற்பதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக இந்தியாவின் அரசு முறை அதிகாரியாக (ஷெர்பாவாக) பணியாற்ற உள்ளார்.
  • ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஜூலை 09 ஆம் தேதியன்று இந்திய நாடு முழுவதும் அரசு துக்க நாளாக அனுசரிக்கப் பட்டது.
  • கஜகஸ்தானில் நடைபெற்ற எலோர்டா கோப்பைப் போட்டியில் இந்தியக் குத்துச் சண்டை வீராங்கனைகளான அல்ஃபியா பதான் மற்றும் கிதிகா ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
  • கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 13 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் அணித் தலைவர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
  • இளம் இந்திய கிராண்ட்மாஸ்டர்  D.குகேஷ் ஸ்பெயினின் ஜிஜோன் நகரில் நடைபெற்ற கிஜோன் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்