தேசிய வேளாண் ஆராய்ச்சி மேலாண்மைக் கழகமானது அதன் ஒட்டுமொத்தச் செயல் திறனுக்காக வேண்டி 2021 ஆம் ஆண்டின் சர்தார் படேல் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறந்த நிறுவன விருதினைப் பெற்றுள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளர் K.P.குமரன் 2021 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க J.C. டேனியல் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மலையாளச் சினிமாத் துறைக்கு ஒரு தனிநபர் ஆற்றும் பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் கேரள அரசாங்கத்தினால் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப் படுகிறது.
எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனம் போலி கணக்குகளின் எண்ணிக்கை குறித்த போதுமான தகவலை வழங்கத் தவறியதை அடுத்து, 44 பில்லியன் டாலர் தொகையில் ட்விட்டரை வாங்குவதற்கான திட்டத்தினை ரத்து செய்துள்ளார்.