TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 27 , 2022 726 days 347 0
  • ஒவ்வோர் ஆண்டும், ஜூலை 22 ஆம் தேதியன்று மாம்பழங்களைக் கொண்டாடும் வகையில் தேசிய மாம்பழத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • எல்தோஸ் பால், அமெரிக்காவில் நடைபெறும் 2022 ஆம் ஆண்டிற்கான உலக தடகள சாம்பியன்ஷிப் மும்முறை தாண்டல் போட்டியின் இறுதிச் சுற்றிற்குத் தகுதி பெற்ற முதல் இந்தியர் ஆனார்.
  • நீரஜ் சோப்ரா, அமெரிக்காவில் நடைபெறும் 2022 ஆம் ஆண்டிற்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக வெள்ளிப் பதக்கத்தினை வென்று வரலாறு படைத்துள்ளார்.
    • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை வென்ற முதல் இந்தியராக இவர் உருவெடுத்துள்ளார்.
  • திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் தேசியப் பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமானது, மென் ரகப் பொருட்களின் (CASM) வேதியியல் மற்றும் பயன்பாடுகள் குறித்த சர்வதேச மாநாட்டினை நடத்த உள்ளது.
  • வங்காளதேசத்தைச் சேர்ந்த மலையேறும் வீராங்கனையான வசிஃபா நஷ்ரீன், இரண்டாவது உயரிய மலைச் சிகரமான K2 சிகரத்தில் ஏறிய முதல் வங்காளதேச நபர் என்ற பெருமையைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்