TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 29 , 2022 724 days 400 0
  • 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிக்கான ‘வணக்கம் சென்னை’ கீதத்தை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்.
  • கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தொடக்க நிறுவன காப்பு மற்றும் புத்தாக்க மையமானது, "நிர்மான்" உத்வேகத் திட்டத்தை தொடங்கி ள்ளது.
  • சர்வதேச கிரிக்கெட் சபையானது, அதன் 78வது வருடாந்திரப் பொதுக் கூட்டத்தில் மங்கோலியா, சுவிட்சர்லாந்து மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளை தனது புதிய உறுப்பினர் நாடுகளாக இணைத்தது.
  • உலக வங்கியானது, இண்டர்மிட் கில் என்பவரை அதன் தலைமைப் பொருளாதார நிபுணராகவும், மேம்பாட்டுப் பொருளாதாரத்திற்கான மூத்த துணைத் தலைவராகவும் நியமித்துள்ளது.
    • கௌசிக் பாசுவுக்குப் பிறகு, இந்த சர்வதேச நிதி நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராக பொறுப்பேற்க உள்ள இரண்டாவது இந்தியர் கில் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்