பந்தன் வங்கியானது (Bandhan Bank) முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரானR. கான் அவர்களை நிர்வாகி அல்லாத தலைவராக (non-executive chairman) நியமித்துள்ளது. 2018 ஆம் ஆண்டின் ஜூன் 5-ஆம் தேதி தேதியிலிருந்து மூன்று ஆண்டுகாலத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார் அல்லது சுதந்திரமுடைய இயக்குனராக இவருடைய பதவிக்காலம் நிறைவடையும் வரை இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வாரணாசிக்கு 26 கி.மீ தொலைவில் உள்ள பபாத்பூரில் அமைந்துள்ள லால்பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையமானது தனது ஓடுபாதைக்கு கீழே தேசிய நெடுஞ்சாலையைக் கொண்டுள்ள இந்தியாவின் முதல் விமான நிலையமாக உருவாக உள்ளது.
2017-18 ஆம் நிதியாண்டிற்கான சிறந்த எதிர்பார்ப்பு மேலாண்மை வகைப்பாட்டின் (Best Expectation Management- Mid Cap) கீழ், 2018 ஆம் ஆண்டின் முதலீட்டாளர் உறவு விருதுகள் (Investor Relations Awards 2018) கார்ப்பரேஷன் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜூலை 31 ஆம் தேதி முதல் பாலிதீன் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
IDBI வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான MK ஜெயின் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் துணை ஆளுநராக இருந்து வந்த SS முந்திரா அவர்களின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து தற்போது MK ஜெயின் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மூன்றாவது சர்வதேச ஆசிய கோப்பை பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் போட்டியை கோவாவில் இந்தியா நடத்த உள்ளது.