TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 6 , 2022 685 days 374 0
  • நீரஜ் சோப்ரா தனக்குத் தங்கப் பதக்கம் பெற்று தந்த ஈட்டியை சுவிட்சர்லாந்தின் லொசானில் உள்ள ஒலிம்பிக் அருங்காட்சியகத்திற்குப் பரிசாக அளித்துள்ளார்.
  • கனடாவின் மார்க்கம் நகரமானது  அங்குள்ள ஒரு தெருவிற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரைச் சூட்டியுள்ளது.
    • இவர் 'மதராஸின் மொஸார்ட்' என்று அழைக்கப்படுகிறார்.
  • அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி சபையானது நாடு முழுவதும் டிஜிட்டல் படைப்பாற்றல் திறன்களை மேம்படுத்தவதற்காக, அடோப் நிறுவனத்துடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
  • ஆறு ஆண்டுகளுக்கும் மேலான சிறைத் தண்டனையுடன் கூடியக் குற்றங்களில் தடயவியல் ஆதாரங்களைச் சேகரிப்பதைக் கட்டாயமாக்கிய இந்தியாவின் முதல் காவல் துறை என்றப் பெருமையை டெல்லிக் காவல்துறை பெற்றுள்ளது.
    • டெல்லி ஒரு ஒன்றியப் பிரதேசம் என்பதால், டெல்லி காவல்துறையானது உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது.
  • புலப்ரே பாலகிருஷ்ணன் எழுதிய 'India’s Economy from Nehru to Modi: A Brief History' என்ற புதிய புத்தகமானது விரைவில் வெளியிடப்பட உள்ளது.
    • ஜவஹர்லால் நேரு அவர்களுடைய ஆட்சிக் காலத்திலிருந்து தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சி வரையிலான இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் பற்றி இப்புத்தகத்தில் எழுதப் பட்டுள்ளது.
  • இந்தியாவின் நான்காவது தூயக் காற்று உச்சி மாநாடானது பெங்களூரூ நகரில் நடைபெற்றது.
    • காற்று மாசுபாடு ஆய்வு மையம் (CAPS) மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் (CSTEP), மற்றும் பல சிந்தனைக் குழுக்கள் ஆகியவை இணைந்து இந்த உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.
  • மேலாண்மைக்கான ஒருங்கிணைந்த கற்றல் பல்கலைக்கழக நிறுவனமானது, இந்தியாவின் முதல் 2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை நிறைவேற்றப் படும் சட்டப் பள்ளியைத் தொடங்கியுள்ளது.
    • இது இந்தியாவில் ஹரியானா மாநிலத்தின் குர்கான் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக் கழகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்