TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 11 , 2022 650 days 369 0
  • நொய்டா பெருநகரத்தில் அமைந்துள்ள இந்தியக் கண்காட்சி மையம் & வணிக வீதி மையத்திற்கு, "2018-19 ஆம் ஆண்டிற்கான சிறந்தத் தனித்தியங்கும் வணிக மையத்திற்கான தேசியச் சுற்றுலா விருதானது" வழங்கப்பட்டது.
  • 500 நாட்களில் 25,000 கைபேசி சமிக்ஞை வழங்கிகளை நிறுவுவதற்காக ₹26,000 கோடி நிதிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஒரு ‘தேசியத் தூதராக’ நடிகர் பங்கஜ் திரிபாதி அறிவிக்கப் பட்டுள்ளார்.
  • டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையைப் படிப்படியாக அறிமுகப் படுத்தவுள்ளது.
  • இஸ்ரோவின் மூத்த அறிவியலாளர் டாக்டர் A.K.அனில் குமார், சர்வதேச விண்வெளிக் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • சுஜோய் லால் தாசன், அனிஷ் தயாள் சிங் ஆகியோர் முறையே மத்திய சேமக் காவல் படை மற்றும் இந்தியத் திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றின் புதிய தலைமை இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • ஆல்பாபெட் நிறுவனத்தின் கூகுள் தனது முதல் மேகக் கணிமைப் பிராந்தியத்தைக் கிரேக்க நாட்டில் அமைக்க உள்ளது.
    • உலகத்தின் மேகக் கணிமை மையமாக மாறுவதற்கான அந்த நாட்டின் வெகுவான முயற்சிகளுக்கு இது ஒரு ஊக்கத்தை அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்