TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 14 , 2018 2359 days 883 0
  • உலக வங்கி அடல் புஜல் யோஜனா என்ற 6000 கோடி ரூபாய் மதிப்புடைய, நீர்வளத்துறை, நதி மேம்பாடு மற்றும் கங்கை நதி புரைமைப்பு அமைச்சகத்தின் மத்திய அரசுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் உலக வங்கியின் உதவியுடன் 2018-19 முதல் 2022-23 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு அமல்படுத்தப்படும்.
  • கார்பாட் (CORPAT) நிகழ்ச்சியின் 31வது பதிப்பு இந்தோனேசியாவின் பெலவானில் முடிவுற்றது. இதற்கு இந்தியா கோரா வகை கார்வெட் ஏவுகணை (Kora Class Corvette missile) பொருத்தப்பட்ட ஐஎன்எஸ் குலிஸ் (INS Kulish) என்ற கப்பலையும் ஒரு டார்னியர் வகை கடல்சார் ரோந்து விமானத்தையும் அனுப்பியுள்ளது.
    • முன்னதாக போர்ட் ப்ளேரில் 2018ம் ஆண்டு மே மாதம் 18 முதல் 25 வரையில் இந்தியா-இந்தோனேசியா Corpat (IND-INDO CORPAT) அணி வகுப்பின் துவக்க விழா நடைபெற்றது.
  • மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பகத் சிங்கின் சிறைக் குறிப்புகள் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த சிறைக் குறிப்பு புத்தகம் பகத் சிங் மற்றும் அவரது படைப்புகள் பற்றிய தொகுப்பாகும்.
  • போலந்து குடியரசிற்கான தற்போதைய இந்தியத் தூதரான சேவங் நாம்கியால் ஒரே நேரத்தில் லித்துவேனியா குடியரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பழம்பெரும் நடிகரான அனுபம் கேர் பாங்காங்கில் அடுத்து நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட சங்கத்தின் (International Indian Film Academy - IIFA) 19வது பதிப்பில் பெருமைமிகு வாழ்நாள் சாதனையாளர் பெருமையை கிடைக்கப் பெற உள்ளார்.
  • லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையரகத்தில் தற்சமயம் அலுவலராக உள்ள மது சேதி கியூப குடியரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • வெளியுறவு அமைச்சகத்தில் தற்சமயம் கூடுதல் செயலாளராக உள்ள ருதேந்திர தாண்டன் ஆசியானிற்கான (ASEAN) இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஆசிய பசுபிக் பகுதியில் 16 நாடுகளிலிருந்து 66 போட்டியாளர் பங்கு பெற்ற எல்லைகளற்ற ஆசியாவின் கூடைப்பந்து (Basketball without Borders Asia) என்ற போட்டியில் உறுதியான மகளிர் விருது (Girls Grit Award) என்ற பதக்கத்தைப் பெற்ற சக போட்டியாளர் வைஷ்ணவி யாதவ்வைக் காட்டிலும் இந்தியாவின் சஞ்சனா ரமேஷ் மிகுந்த மதிப்புமிக்க வீரர் என்ற விருது அளிக்கப்பட்டார்.
    • சஞ்சனா கூடுதலாக NBA அகாடமி பெண்கள் பிரிவிலும் துணை மதிப்பு மிக்க வீரர் விருதை வென்றுள்ளார். பிலிப்பைன்சின் ரென்ஸ் போர்க்ஸ்கை பாட்ரிகோ ஆடவர் பிரிவில் மிகுந்த மதிப்புடைய வீரர் விருதை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்