TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 2 , 2022 628 days 342 0
  • தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப வரலாற்றில் மேற்கொள்ளப்படும் முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்புகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 29 ஆம் தேதியன்று சர்வதேச இணைய தினம் கொண்டாடப் படுகிறது.
  • தடிப்புத் தோல் அழற்சி நோய் மற்றும் அதன் சிகிச்சை தொடர்பான முக்கியத் தகவல்களை பொது மக்கள் அறிந்து கொள்ள செய்யும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 29 ஆம் தேதியன்று உலக தடிப்புத் தோல் அழற்சி நோய் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
    • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "தடிப்புத் தோல் அழற்சி நோயைக் குறைத்தல்" என்பதாகும்.
  • குஜராத்தின் ராஜ்கோட் நகரில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA) ஏற்பாடு செய்துள்ள மூன்று நாள் நிகழ்ச்சியான ‘2022 ஆம் ஆண்டு இந்திய நகர்ப்புற வீட்டுவசதி மாநாட்டினை' பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • இமாச்சலப் பிரதேசத்தின் உனா எனுமிடத்தில் நிறுவப்பட்டுள்ள இந்தியத் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தை (IIIT) பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் இந்தியப் பிரதிநிதியான ஷெபாலி ஜுனேஜா, ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு விமானப் போக்குவரத்து அமைப்பின் விமானப் போக்குவரத்துக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • பயங்கரவாதத்தை எதிர்க்கும் உத்தியாக 2024 ஆம் ஆண்டிற்குள், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தேசியப் புலனாய்வு முகமை அலுவலகங்கள் நிறுவப்பட உள்ளன.
  • 2022 ஆம் ஆண்டு மகளிர் ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தியது.
    • இந்தியா 7வது முறையாக இப்போட்டியில் வென்று உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்