TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 23 , 2022 606 days 350 0
  • விப்ரோ ஒரு ஐரோப்பியப் பணிக் குழுவை (EWC) அமைப்பது தொடர்பாக தொழிலாளர் பிரதிநிதிகளுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது.
    • விப்ரோவின் EWC என்ற குழுவின் உருவாக்கம் இந்தியாவில் தலைமையகத்தை கொண்ட ஒரு நிறுவனத்தால் நிறுவப்படும் முதல் அமைப்பாகும்.
  •  சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தின் (ITTF) தடகள ஆணையத்திற்கு இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை நட்சத்திர இந்திய வீரர் அச்சந்தா ஷரத் கமல் பெற்றுள்ளார்.
    • இவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) தடகள ஆணையத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.
  • லான்ஸ் நாயக் மஞ்சு, 10,000 அடி உயரத்தில் மேம்படுத்தப் பட்ட ஹெலிகாப்டர் (ALH) துருவ் என்பதில் இருந்து குதித்த  இந்திய ராணுவத்தின் முதல் பெண் ஸ்கை டைவர் ஆனார்.
  • இந்திய ராணுவம் 242வது ராணுவப் பொறியாளர்கள் தினத்தை நவம்பர் 18ஆம் தேதி கொண்டாடுகிறது.
    • ராணுவப் பொறியாளர்கள் அமைப்பில் ராஸ், வங்காளம் மற்றும் பாம்பே என்ற மூன்று குழுக்கள் 1932 ஆம் ஆண்டு 18 நவம்பர்  அன்று ராணுவத்தில் இணைக்கப் பட்டன.
  • தென் கொரியாவின் டேகு நகரில் நடைபெற்ற ஆசிய ஏர் கன் சாம்பியன்ஷிப் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த ஷிவா நர்வால் தங்கப் பதக்கம் வென்றார்.
  • முக நூலின் தாய் நிறுவனமான மெட்டா, சந்தியா தேவநாதனை நாட்டின் புதிய உயர் செயல் அதிகாரியாக நியமித்துள்ளது.
    • முன்னதாக, நாட்டின் முன்னாள் தலைவர் அஜித் மோகனை உடனடியாக பணியில் இருந்து விலக்குவதாக மெட்டா அறிவித்தது.
  • உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் நைனிடாலில் இருந்து ஹல்த்வானிக்கு மாற்றப் படள்ளது.
    • 2000 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டு ஒரு நாள் கழித்து நைனிடாலில் உயர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்