TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 19 , 2018 2222 days 687 0
  • பொதுத்துறை வங்கியான விஜயா வங்கி 2017-2018 நிதி ஆண்டிற்கான சிறப்பாக செயலாற்றும் பொதுத்துறை வங்கிக்கான விருதை ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி மன்றத்திடம் (Pension Fund Regulatory and Development Authority-PFRDA)இருந்து பெற்றிருக்கின்றது. இவ்வங்கி அடல் பென்சன் யோஜனாவின் கீழ் சிறப்பாக செயலாற்றியிருக்கின்றது.
    • இவ்விருது டில்லியில் நடந்த தேசிய அடல் பென்சன் யோஜனா மாநாட்டில் வழங்கப்பட்டுள்ளது.
  • 1988ம் ஆண்டிற்கான AGMUT பணிப் பிரிவைச் சேர்ந்த ADGP தகுதியில் உள்ளசுந்தரி நந்தா என்ற இந்திய காவல் பணி அதிகாரி புதுச்சேரியின் முதல் பெண் பொது காவல் இயக்குநராகப் (Director General of Police-DGP) பொறுப்பேற்கவுள்ளார்.
  • கேரள மாநில அரசின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுத் திட்டமான, உலகம் முழுவதும் உள்ள யோகா நிபுணர்களுக்கு சிறப்பு சுற்றுலாப் பயணமான “யோகா தூதர்கள் சுற்றுலாத் திட்டம்” (Yoga Ambassadors Tour) ஆயுஸ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக்கால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
  • ஏப்ரல், மே, மற்றும் ஜூன் முதல் வாரம் ஆகிய காலகட்டங்களில் e-way ரசீதுகளைத் தயாரிப்பதில் குஜராத் முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளது. இந்த மாநிலம் 72 மில்லியன் அளவிற்கு மாநிலத்திற்குள்ளேயும் மாநிலத்திற்கு வெளியிலும் e-way ரசீதுகளைத் தயாரித்துள்ளது. அம்மாநிலத்தை அடுத்த இடங்களில் முறையே மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்திரப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்