TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 3 , 2022 596 days 354 0
  • மத்தியக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள், இந்திய வரலாற்று ஆராய்ச்சி சபையால் தயாரித்து வெளியிடப்படும் ‘India: The Mother of Democracy’ என்ற புத்தகத்தை புதுடெல்லியில் வெளியிட்டார்.
  • மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 7 சிக்ஸர்களை அடித்து A கிரிக்கெட் பிரிவில் உலக சாதனையினைப் படைத்தார்.
  • P.T. உஷா, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக பதவியேற்க உள்ளார்.
  • 2020 ஆம் ஆண்டில் டோக்கியோவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற அவனி லெகாரா, ஆண்டின் சிறந்த மாற்றுத் திறனாளி வீரராகவும், ஷ்ரே காத்யன் ஆண்டின் சிறப்பு விளையாட்டு வீரராகவும் அங்கீகரிக்கப் பட்டுள்ளனர்.
  • போர்ச்சுகல் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிபா கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியின் ஐந்து வெவ்வேறுப் பதிப்புகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
    • FIFA உலகக் கோப்பைப் போட்டிகளின் வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றதன் மூலம் அவர் லியோனல் மெஸ்ஸியை விஞ்சியுள்ளார்.
  • ஸ்பெயின் நாட்டினைச் சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ், இந்த ஆண்டு இறுதி ATP டென்னிஸ் போட்டிகளின் முன்னணி இளம் நபர் என்ற பெருமையினைப் பெற்றதோடு, இந்த சாதனையை எட்டிய முதல் இளைஞர் என்ற சாதனையினைப் படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்