TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 20 , 2022 579 days 332 0
  • டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் N.சந்திரசேகரன், ஒட்டு மொத்த G20 நாடுகளின் வர்த்தகச் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் B20 இந்தியா என்ற பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியாவின் முதல் ஆளில்லா விமானத் திறன் உருவாக்கம் மற்றும் பயிற்சிக்கான இணைய வழி கற்றல் தளமானது இந்தியாவின் ஆளில்லா விமான உற்பத்தி சார்ந்த புத்தொழில் நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் சென்னை உற்பத்தி மையத்தில் திறக்கப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டு உலக ஆயுர்வேத மாநாடு & ஆரோக்யா கண்காட்சியானது கோவாவில் நடத்தப் பட்டது.
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பானது, சர்வதேச தினை ஆண்டிற்கான (2023) தொடக்க விழாவை இத்தாலியின் ரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ளது.
  • போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பனில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு உலக நீரிழிவு மாநாட்டின் தொடக்க விழாவில் வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களை சர்வதேச நீரிழிவுக் கூட்டமைப்பினால் (IDF) "உலகளாவிய நீரிழிவு நோய்த் தூதராக" நியமித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்